பால் விலையைத் தொடர்ந்து தயிர் விலையும் உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

 
தயிர்

 

கர்நாடகத்தில் நந்தினி பால் விலையைத் தொடர்ந்து தயிர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் செலவுகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக பால் கூட்டமைப்பான கே.எம்.எஃப். (KMF) இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் நந்தினி தயிரின் விலை ரூ.54-ல் இருந்து ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. அதாவது லிட்டருக்கு ரூ.14 அதிகரிக்கப்பட்டுள்ளது. அரை லிட்டர் தயிரின் விலையும் ரூ.28-ல் இருந்து ரூ.34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏற்கெனவே நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்ட நிலையில், தயிர் விலையும் அதிகரிக்கப்பட்டிருப்பது நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு கர்நாடக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் விலை உயர்வைக் கண்டித்துள்ளார். பால் மற்றும் தயிர் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.