அடைக்கலம் கொடுத்த டாக்டர் வீட்டிலேயே ரூ.91.75 லட்சம் நகைகள் திருட்டு: 2 பெண்கள் கைது!

 
கர்நாடகா

 

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே டாக்டர் தம்பதியின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு ரூ.91.75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய வேலைக்காரப் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். துமகூரு மாவட்டம் ஜெயநகர் பகுதியில் வசித்து வரும் டாக்டர் யஷ்வந்த் மற்றும் நளினி தம்பதியிடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சினேகா (24) என்ற கர்ப்பிணிப் பெண் உதவி கேட்டு வந்துள்ளார்.

karnataka crime

இதையடுத்து சினேகாவுக்கு அடைக்கலம் கொடுத்த டாக்டர் தம்பதி, வீட்டு வேலை மற்றும் குடும்பத்தினருக்கும் உதவிகள் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், கடந்த 6 மாதங்களாக லாக்கர் சாவிகளைத் திருடி 800 கிராமுக்கும் அதிகமான நகைகளைச் சினேகா திருடியுள்ளார். லாக்கரைத் திறந்து பார்த்தபோது நகைகள் மாயமானது தெரியவந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

நகைகளைச் சவுமியா என்பவரிடம் விற்று கார், பைக்குகள், ஆட்டோக்கள் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், திருட்டு அம்பலமாகாமல் இருக்க டாக்டர் தாயார் மற்றும் குழந்தையைக் கொலை செய்யவும் இவர்கள் சதித் திட்டமிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினேகா மற்றும் சவுமியாவை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கார், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் 220 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தேசியக் குற்றச் செய்திகளைத் தினமாலை.காம் தளத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.