கார்த்திகை தீபம்: விளக்கேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

 
கார்த்திகை

 

கார்த்திகை தீபத் திருநாளன்று பூஜை அறையிலோ அல்லது வாசலிலோ ஒற்றைத் திரியில் விளக்கேற்றுவதைத் தவிர்த்து, எப்போதும் இரட்டைத் திரி போட்டு விளக்கேற்றுவதே சிறந்தது எனக் கூறப்படுகிறது.

கார்த்திகை தீபம்

மேலும், தெற்கு திசை நோக்கி விளக்கேற்றுவதைத் தவிர்த்து, கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். விளக்கை வாயால் ஊதி அணைக்காமல், பூ கொண்டு சாந்தப்படுத்துவது நல்லது.

கார்த்திகை தீபம்

குறிப்பாக, வீட்டில் தீபங்கள் எரிந்து கொண்டிருக்கும்போது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்வது பாதுகாப்பற்றது என்பதோடு, ஆன்மிக மரபுப்படியும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.பக்தர்கள் இந்த விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக வழிபட அறிவுறுத்தப்படுகிறது.