கார்த்திகை தீபம்.. பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு பளீச்!
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மலை மேல் ஏற பொது மக்களுக்கு அனுமதி அளிப்பது குறித்த கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
அதில் சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டி, திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்படுமா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு “சங்கக்காலத்தில் இருந்து திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 18ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலை கிரிவல பாதையில் களஆய்வு செய்தார். திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் கொப்பறை தீப தீபம் இன்றியமையாத ஒன்று. இந்நிலையில், மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து வல்லுநா் குழு ஆய்வு மேற்கொண்டது.

அந்த அறிக்கையின் படி 350 கிலோ கொண்ட கொப்பறை மற்றும் சுமார் 450 படி நெய்யை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். இவை இரண்டும் எடுத்துச் செல்வதற்கு தேவையான மனித சக்திகளை பயன்படுத்தி, எவ்வித அசாம்பாவிதமும் ஏற்படாமல் தீபத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கம் போல் திருவண்ணாமலை உச்சியின் மேல் தீபம் இந்தாண்டும் எரியும்” எனக் கூறியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
