நவராத்திரி கொலுபொம்மை, கார்த்திகை அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், திருக்கார்த்திகையையொட்டி அகல் விளக்கு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. அந்தப் பகுதிகளில் களிமண் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவிபட்டிணம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலகுறிச்சி, பில்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடைபெற்று வருகிறது. சமையலுக்கு தேவையான பானைகளுடன் இங்கு நவராத்திரி கொலுபொம்மை, அகல் விளக்கு என முக்கிய விசேஷங்களின் போதும் மண்பாண்டம் தொழில் பரபரப்பாக இருக்கும்.
இதில், ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையையொட்டி அகல் விளக்கு தயாரிப்பு பணியில், சுமார் 3 மாதங்களுக்கு முன்பாகவே தொழிலாளர்கள் ஈடுபடத் தொடங்கிவிடுவர் அந்த வகையில் நடப்பாண்டில் நவம்பர் 16ம் தேதி கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தீப வழிபாடு நடக்கிறது. தற்போது மழை குறைவால், கார்த்திகை மாதத்திற்கு தேவையான அகல் விளக்கு தயாரிப்பு பணியை, மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அகல்விளக்கு தயாரித்து உலர வைக்கும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அகல் விளக்கு தயாரிப்பதற்குண்டான உரிய தரமான களிமண் கிடைக்காமல் அகல் விளக்கு தயாரிக்கும் பணிக்கான களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளிகள் வேதனை தெரிவித்த்ள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அகல் விளக்கு விலை அதிகரித்துள்ளது.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் ‘‘பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சமையலுக்கு தேவையான பானை மற்றும் பொம்மை, அகல்விளக்கு ஆகியவை தயாரிப்பதற்காக, கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்திலிருந்து அனுமதிபெற்று களிமண் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கோதவாடி குளத்திலிருந்து களிமண் எடுக்க கெடுபிடி அதிகரித்துள்ளது. இதனால், முறையான களிமண் கிடைக்காததால் களிமண் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 12 எண்ணம் கொண்ட ஒரு டஜன் அகல் விளக்கு ரூ.12 முதல் ரு.14 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு டஜன் அகல் விளக்கு ரூ.15 முதல் 18 வரை விற்பனை செய்யப்படுகிறது. போதிய களிமண் கிடைக்காததாலும், கூடுதல் விலை தவிர்க்க முடியததாகிவிட்டதாக கூறுகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா