“பொய் FIR பதிவு செய்யக்கூடாது” - விஜய் அரசுக்கு கஸ்தூரி முக்கிய கோரிக்கை!

 
கஸ்தூரி

 

'ஆஃப் தி ரெக்கார்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சினிமா தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஏற்படுத்தியிருப்பதை வரவேற்பதாக கஸ்தூரி தெரிவித்தார்.

முதல் - அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!”; நடிகை கஸ்தூரி/“First - I have faith in Minister Vijay!”; Actress Kasthuri

அதேநேரத்தில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பொய்யான FIR பதிவு செய்யும் நிலைக்கு அரசு சென்றுவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.அரசு நடவடிக்கைகள் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையே தனது கருத்தாக கஸ்தூரி முன்வைத்துள்ளார்.