சிஎஸ்கேவின் பிராண்ட் அம்பாசிடராகிறார் கத்ரீனா கைஃப்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

17வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்கப்பட உள்ளது. மே இறுதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமாக இப்போதிருந்தே திட்டமிட்டு வருகின்றனர். இதனை வெகுசிறப்பாக நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் பல நடைமுறைகளை திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது. அதன் ஒரு பகுதியாக தற்போது சிஎஸ்கே அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே வீரர்கள் நடிக்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைப்பும் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. அதே போல் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளிலும் சியர் அப் கேர்ளாக கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!