சட்டமன்றத்தில் பரபரப்பு...வெற்றிச் சான்றிதழ் இல்லாததால் அமைச்சர் கீர்த்தனா பதவியேற்பு நிறுத்தம்!

 
கீர்த்தனா கீர்த்தனா

 

தமிழகத்தின் 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடர், தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் இன்று (மே 11) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவையில் முதலமைச்சர் விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும், புதிய எம்.எல்.ஏ-க்களும் வரிசையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். கோட்டை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய்

இந்தச் சூழலில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கீர்த்தனா மட்டும் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத காரணத்தால், தொழில்நுட்ப ரீதியாக அவரது பதவியேற்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அமைச்சர்களும் எவ்விதத் தடையுமின்றித் தங்களது உறுதிமொழியை ஏற்றுப் பதவியேற்றுக் கொண்டனர். இந்தச் சிறிய குளறுபடியால் சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

முதல்வர் விஜய்

அமைச்சர் கீர்த்தனாவைத் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாகத் தங்களது பதவியேற்பு உறுதிமொழியை எடுத்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய எம்.எல்.ஏ-க்கள் பலரும் முதல்முறையாக அவைக்கு வந்து பொறுப்பேற்பது அந்தத் தரப்பினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பதவியேற்பு நிகழ்வுகள் முடிந்த பிறகு, நாளை (மே 12) முறைப்படி சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட உள்ளது.