அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.... யார் மாப்பிள்ளை கீர்த்துமா?!
தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகையாக இருந்து வரும் கீர்த்திசுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பரில் கோவாவில் வைத்து திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மாப்பிள்ளை யார் என்கிற விபரமும் சேர்ந்தே வெளியாகியுள்ளது . குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு வந்த கீர்த்தி சுரேஷுக்கு தற்போது 32 வயதாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்த மாதம் அதாவது டிசம்பரில் கோவாவில் சொந்தக்காரப் பையனை திருமணம் செய்து கொள்ள கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷோ, அவரது பெற்றோர்களோ எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை. கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என தகவல் வெளியாகியிருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாப்பிள்ளை பற்றி விபரம் வெளியாகும். தற்போது சொந்தக்காரப் பையன் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான பட்டியலில் இருக்கும் மாப்பிள்ளை இல்லை. இவர் புதுப்பையன் அதுவும் சொந்தத்திலேயே எனக் கூறப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத்துக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்று பல முறை தகவல் வெளியானது. அதன் பிறகு பாஜக நிர்வாகியின் மகன், துபாய் தொழில் அதிபர், நகைக்கடை உரிமையாளரின் மகன் என பல மாப்பிள்ளைகளின் பெயர்கள் கூறப்பட்டன. என் மகளுக்கு திருமணம் நடந்தால் நாங்களே அறிவிக்கிறோம் என கீர்த்தியின் அப்பா சுரேஷ் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் திருமண பேச்சு கிளம்பியிருக்கிறது.
எனக்கு இன்னும் எத்தனை மாப்பிள்ளை தான் பார்ப்பீங்கனு நானும் பார்க்கிறேன் என அமைதியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதற்கிடையே நான் சிங்கள்னு எப்ப சொன்னேன் என சமீபத்தில் கூறியிருந்தார் கீர்த்தி. அந்த பையன் யார் என்ற ரகசியத்தை மட்டும் கீர்த்துமா இதுவரை தெரிவிக்கவே இல்லை. பர்சனலை பர்சனலாகவே வைக்க விரும்புகிறார் என்பதற்கு ஏற்றாற் போல் தன் வாழ்க்கையில் இருக்கும் நபரை பற்றி அறிவிப்பதும், அறிவிக்காமல் இருப்பதும் கீர்த்தி சுரேஷின் விருப்பம் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!