மாஸ் வீடியோ... கீர்த்தி சுரேஷ் ’தல’ பொங்கலில் நடிகர் விஜய்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் 2024 இறுதியில் தனது காதலரை கரம் பிடித்தார். தற்போது கீர்த்தி கணவருடன் 'தல' பொங்கலை கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் பொங்கலை கொண்டாட அங்கே திடீரென சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து தளபதி விஜய்யும் அவர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடியுள்ளார்.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் கதிர் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இறுதியில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது பல வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணத்துக்கு விஜய் மற்றும் த்ரிஷா சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில், விஜய்யின் அட்மின் மற்றும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய்யும் கலந்து கொண்ட வீடியோவை தி ரூட் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் வைத்திருக்கிறது. கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்ற விஜய் தற்போது பொங்கல் விழாவிலும் பங்கேற்று பொங்கல் பானையில் பச்சரிசி, வெள்ளம் போடும் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.
இந்நிகழ்வில் கிராமப்புற விளையாட்டுக்களான பானை உடைக்கும் போட்டிகள் அரங்கேறின. நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் கதிர் என பலர் பானைகளை உடைத்து விளையாடும் காட்சிகளும் இடம் பெற்றன. கணவருடன் இணைந்து செம ஜாலியாக கீர்த்தி சுரேஷ் விளையாடுவதை பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். அதனையடுத்து பெண்கள் அணி ஒரு புறமும் கதிர், ஆண்டனி தட்டில், ஜெகதீஷ் உள்ளிட்ட ஆண்கள் அணி ஒரு புறமும் நடத்திய மியூசிக்கல் ச்சேர் போட்டிகள் அடங்கிய காட்சிகளும் நடைபெற்றன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .