அமெரிக்காவில் தோழிகள் இருவரைக் கொன்ற கேரள இளம்பெண் கைது!

 
அமெரிக்கா கேரள பெண் கொலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கேரளாவைச் சேர்ந்த இரண்டு தோழிகளைக் கத்தியால் குத்தியும் காரை ஏற்றியும் கொடூரமாகக் கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த அனிலா பேபி (32) என்ற பெண், தனது தோழிகளான மேரி மேத்யூ (35) என்பவரைக் கத்தியால் குத்தியும், அஞ்சனா ஹரி (35) என்பவர் மீது காரை ஏற்றியும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு மற்றும் தகராறே இத்தகைய கொடூரமான முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றச் செயலில் ஈடுபட்டுவிட்டுத் தப்பியோட முயன்ற அனிலாவை அமெரிக்கக் காவல்துறையினர் உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, கொல்லப்பட்டவர்களின் உடல்களைச் சொந்த ஊரான கேரளாவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.