பதவியேற்றதும் சர்ச்சை... கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்கு கட்டுப்பாடு!
கேரள ஆளுநராகப் பொறுப்பேற்ற ஓம் பிரகாஷ் மாத்தூர், திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவன் சமையலறையில் அசைவ உணவுகள் சமைக்கக் கூடாது என அறிவுறுத்தியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தின் உணவுப் பண்பாட்டில் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு முக்கிய இடம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், உணவுத் தேர்வு தனிநபர் உரிமை எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆளுநரின் உணவு விருப்பம் தொடர்பான அறிவுறுத்தல் ஊழியர்களின் உணவுப் பழக்கங்களுக்குப் பொருந்தாது என லோக் பவன் வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன. ஊழியர்கள் தங்கள் விருப்பமான உணவை வீட்டிலிருந்து கொண்டுவரவோ வெளியே வாங்கிச் சாப்பிடவோ தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆளுநரின் அறிவுறுத்தலின் வரம்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது.
