சபரிமலை மண்டல பூஜை விழா ஏற்பாடுகளுக்கு ரூ.551 கோடி நிதி ஒதுக்கீடு- கேரளா அரசு அறிவிப்பு!

 
சபரிமலை

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் கேரள அரசு சார்பில் மாபெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழா எதிர்வரும் நவம்பர் மாத மத்திய பகுதியில் தொடங்கி, அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 3-வது வாரம் வரை விமரிசையாக நடைபெற உள்ளது.

சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

திருவிதாங்கூர் தேவசம்போர்டு மேற்கொண்டு வரும் இதற்கான பணிகளுக்காக ரூ.551.5 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கேரளா முதலமைச்சர் சதீசன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பஷீர், நேரடியாகச் சபரிமலை பகுதிக்குச் சென்று அங்கு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு இந்தத் தொகையை அரசுக்குப் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலேயே தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். சபரிமலை வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றிச் சுமுகமாக நடைபெறுவதற்குத் தேவசம்போர்டுடன் இணைந்து மாநில அரசு முழு வீச்சில் பணியாற்றும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.