கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு - அரசு அறிவிப்பு!

 
மாதவிடாய் பள்ளி மாணவிகள் மாணவி மாதவிடாய் பள்ளி மாணவிகள் மாணவி

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்வதிலும், பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் எப்போதும் முன்னோடியாகத் திகழும் கேரளா அரசு, தற்பொழுது பள்ளி மாணவிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக 3 நாட்கள் வரை 'மாதவிடாய் விடுப்பு' வழங்கப்பட உள்ளது. கேரளாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வி.டி.சதீசன் தலைமையிலான புதிய அரசின் கொள்கை விளக்க உரையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரள சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சூழலில், மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆற்றிய அரசின் கொள்கை விளக்க உரையில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றது.

பொறியியல் என்ஜினியரிங் கல்லூரி 12 பிளஸ்டூ மாணவிகள் பள்ளி

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களை மாணவிகளுக்கு உகந்த சூழலாக மாற்றுவதற்காக இந்தச் சிறப்புத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே, மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் உடல்நலக் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு மாதம் 3 நாட்கள் விடுப்பு அளிக்கப்படவுள்ளது.

மாணவிகள் இந்த விடுப்பை எடுப்பதால் தங்களது பாடப்பிரிவுகளில் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு வார இறுதி நாட்களில் 'சிறப்பு ஈடுசெய் வகுப்புகள்' நடத்தப்பட்டுப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் மட்டுமின்றி, உழைக்கும் பெண்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் இந்த ஆளுநர் உரையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

முறைசாரா தொழில்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு மற்றும் சிறப்புப் பலன்கள் வழங்கப்படும். பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பான காப்பகங்கள்: 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு செயல்படும் அனைத்துப் பொது மற்றும் தனியார் அலுவலகங்கள், ஐடி பூங்காக்கள், தொழிற்சாலைகளில் தரமான குழந்தைக் காப்பகங்கள் அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

சிபிஎஸ்இ மாணவிகள்

கேரள அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் கட்டணமில்லா இலவசப் பேருந்து பயணத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. கேரளாவில் ஏற்கனவே கல்லூரி மாணவிகள் மற்றும் ஐடிஐ பயிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் உள்ள சூழலில், தற்பொழுது அது பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது தவெக புதிய அமைச்சரவையுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள சூழலில், இன்னும் சில வாரங்களில் தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடவுள்ளது. கேரள அரசின் இந்த அதிரடிப் புரட்சியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதேபோன்ற 'மாதவிடாய் விடுப்பு' திட்டம் தவெக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழகப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.