ஓணம் திருவிழா... திருச்சூரில் புலிக்கலி நடத்த கேரள அரசு அனுமதி!
ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக கேரள மாநிலம், திருச்சூரில் புலிக்கலி நடத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது .முன்னதாக, வயநாட்டில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்புக்கு காரணமான பயங்கர நிலச்சரிவைத் தொடர்ந்து கேரள அரசு, இந்த வருடம் ஓணம் கொண்டாடங்கள் அனைத்தையும் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களின் பகுதியான நேரு டிராபி உள்ளிட்ட முக்கிய படகுப் போட்டிகள் தவிர பிற அனைத்து அதிகாரப்பூர்வ ஓணம் கொண்டாட்டத்தையும் கேரள அரசு ரத்து செய்திருந்தது. மக்களையும் தங்கள் வீடுகளில் எளிமையாக ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில், திருச்சூரில் புலிகலி நிகழ்ச்சிக்கு அனுமதியளித்து புதிய உத்தரவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பிறப்பித்தார். கடந்த சில நாட்களுக்கு முன், 'புலிக்கலி தேசம்' அமைப்பினர், திருச்சூர் மாநகராட்சி மேயரிடம், புலிக்கலி நடத்த அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தனர்.

தாள வாத்தியம், வாகனங்கள், கலைஞர்கள் மற்றும் பிற ஏற்பாடுகளுக்கு முன்பணம் செலுத்தியதாக புலிகலி அணியினர் அரசை அணுகி மனு கொடுத்திருந்தனர். திடீரென நிகழ்வை ரத்து செய்வது குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
