மு.க.ஸ்டாலின் தொடர்ந்த கொளத்தூர் தேர்தல் வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
கொளத்தூர் பாபு

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொளத்தூர் பாபு

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொளத்தூர் தொகுதியில் பதிவான விவிபேட் இயந்திரத்திலுள்ள சீட்டுகளை நூறு சதவீதம் மறுஎண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வு இந்த வழக்கை விசாரித்து, மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.