கொடூரம்: திருமணமாகாமல் பெற்றெடுத்த சிசுவை சுவற்றில் வீசி கொன்ற இளம்பெண்!

 
உல்லாசம் கர்ப்பம் இளம்பெண் குழந்தை கள்ளக்காதல்

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே தோக்குப்பாறை சங்குப்பட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவின் உடல் கிடந்தது. தகவல் அறிந்து வந்த அடிமாலி போலீசார் சிசுவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணி குழந்தை  மாணவி இளம்பெண் கள்ளக்காதல்

முன்னதாக அதிக ரத்தப்போக்குடன் அடிமாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவருக்குச் சில மணி நேரத்திற்கு முன்பு பிரசவம் ஆனது தெரியவந்தது. உடல்நிலை மோசமானதால் அவர் மேல் சிகிச்சைக்காகக் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிகிச்சை பெற்ற அந்த இளம்பெண்தான் இறந்து கிடந்த சிசுவின் தாய் என்பது தெரியவந்தது. திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்த அவர், பிரசவித்த சில மணி நேரத்திலேயே அங்கன்வாடி மையச் சுவற்றில் சிசுவை அடித்துக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.