கேரளாவில் மாணவியிடம் அத்துமீறல்? அரை கி.மீ. துரத்திப் பிடித்த 17 வயது சிறுமி!

 
kerala

 

கேரள மாநிலம், கட்டப்பனாவில் பெற்றோருடன் மார்க்கெட்டுக்குச் சென்ற வீணா சாஜி (17) என்ற மாணவியிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி, அங்கிருந்து தப்பியோடிய அவரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார்.

அரை கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் துரத்திச் சென்றபோது, மாணவி கீழே தள்ளப்பட்டதில் முழங்காலில் காயமடைந்தார். இருப்பினும், மனம் தளராமல் தொடர்ந்து விரட்டிய அவர், புதிய பேருந்து நிலையத்தில் அந்த இளைஞரைப் பிடித்தார்.

Woman chases down man after harassment attempt | Kochi News - The Times of India

பின்னர் அங்கிருந்த வியாபாரிகளின் உதவியுடன் அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தார். மாணவியின் துணிச்சலான செயல் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.