BREAKING... பள்ளியில் நச்சுப் புகை பாதிப்பு... 30 மாணவர்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம்... மருத்துவமனையில் அனுமதி!

 
கேரளா

 

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பள்ளியில், தார் கலவை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையைச் சுவாசித்ததால் சுமார் 30 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லம் அருகே செயல்பட்டு வரும் ஆக்ஸிலியம் ஐஎஸ்சி பள்ளிக்கு அருகில் தார் கலவை ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகை பள்ளி வளாகத்துக்குள் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

Breathing Difficulties, Nausea: Over 50 Students Hospitalised After Suspected Toxic Fumes From Tar Plant In Keralam

உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 30 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த தார் கலவை ஆலையின் செயல்பாட்டிற்கு எதிராக ஏற்கனவே புகார்கள் எழுந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் ஆலை செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.