கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு… கடன் சுமையால் விபரீத முடிவு?

 
கேரளா

 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சங்கனாச்சேரியைச் சேர்ந்த சஜூ ஆன்றனி (64), அவரது மனைவி அனு (59), மகன் சவின் (33) ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சஜூ ஆன்றனி நடத்தி வந்த மளிகைக் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால், அதனை மூடியதாகக் கூறப்படுகிறது.

Elderly couple, son found dead at home in Kottayam's Changanassery | Kerala News | Onmanorama

சம்பவத்தன்று வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் சஜூ ஆன்றனியைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து சுங்கனாச்சேரி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மூவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Kottayam: Three Of Family Found Dead Inside Changanassery House! Read On | Asianet Newsable

குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.