4 மாதக் குழந்தை கொலை வழக்கு: பெற்றோர் கைது – ஓராண்டுக்குப் பிறகு அதிர்ச்சி திருப்பம்

 
கேரளா

 

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நான்கு மாதக் குழந்தை உயிரிழந்த வழக்கில், குழந்தையின் பெற்றோர் ஷிஜின், அஞ்சனா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், குழந்தையின் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் காயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

kerala police

விசாரணையில், தந்தை ஷிஜின் குழந்தையைத் தொடர்ந்து தாக்கியதாகவும், இது தொடர்பான தகவல்களைத் தாய் அஞ்சனா மறைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ள போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.