கேரளா நிலச்சரிவு.. பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

 
கேரளா நிலச்சரிவு

கேரளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கோட்டயம், மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் இடுக்கி மாவட்டத்தில் வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கிப் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினரான சின்னம்மாள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரளா நிலச்சரிவு

சென்னையைச் சேர்ந்த சங்கீதா என்பவர் தனது குழுவினருடன் வாகமன் பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்த போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு இளம்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களில் 4 பேரை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் யாசிம் (31), ரகிம் (33), சஜாப் (23) மற்றும் ராபின் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சாஹிதா (41) என்பவரையும் வெள்ளம் அடித்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.