கேரள ஓணம் பம்பர் லாட்டரி பரிசுத் தொகை ₹30 கோடியாக உயர்வு!

 
லாட்டரி

கேரள மாநில அரசின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை சிறப்பு பம்பர் லாட்டரியின் முதல் பரிசுத் தொகை நடப்பாண்டில் (2026) ₹25 கோடியில் இருந்து ₹30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள லாட்டரி துறை சார்பில் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்தியாவிலேயே மிக அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரியாகக் கருதப்படும் இதில், இந்த ஆண்டு முதல் பரிசை மேலும் உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

லாட்டரி ஏஜெண்ட்டுக்கு 1 கோடி ரூபாய் பரிசு

முதல் பரிசு: ₹30 கோடி (கடந்த ஆண்டு ₹25 கோடியாக இருந்தது). பரிசுத் தொகை ₹5 கோடி வரை உயர்த்தப்பட்ட போதிலும், பொதுமக்களின் வசதிக்காக லாட்டரி டிக்கெட்டின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ₹500 ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக் காத்துக்கொண்டிருக்கும் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை, வரும் ஜூலை 17ஆம் தேதி கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.

லாட்டரி

இதனைத் தொடர்ந்து கேரளா முழுவதும் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரி மையங்களில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாகத் தொடங்கும். முதல் பரிசுத் தொகை ₹30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு லாட்டரி விற்பனை புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.