மின்னல் தாக்கியதில் பிரபல கோவில் யானை பலி! கேரளாவில் சோகம்

 
யானை

 

கேரளாவில் பிரபல கோவில் யானை பல்லாட்டு பிரம்மதத்தன் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் யானை ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஈராட்டுப்பேட்டை அருகே மெலம்பாறா பகுதியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 அடி உயரம் கொண்ட பல்லாட்டு பிரம்மதத்தன், அதன் உரிமையாளர் ராஜேஷ் பல்லாட்டின் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை அப்பகுதியில் கனமழையுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் யானை பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்லாட்டு பிரம்மதத்தன் கேரளாவின் முக்கிய கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த பிரபலமான யானையாகும். குறிப்பாக திருச்சூர் பூரம் விழாவில் பாறமேக்காவு தேவஸ்வத்தின் இரவு பூரத்தில் சுவாமி திடம்பை சுமந்து செல்லும் யானைகளில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது.

Pallattu Brahmadathan elephant death | Kerala temple elephant struck by lightning | Thrissur Pooram Paramekkavu tusker

பீகாரில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த யானை, அதன் அமைதியான குணத்தால் யானை ஆர்வலர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றிருந்தது. ‘கஜ கௌஸ்துபம் பல்லாட்டு பிரம்மதத்தன்’ எனவும் யானை ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவின் பல்வேறு கோவில் திருவிழாக்களில் பங்கேற்று வந்த பிரபல யானை திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம், கோவில் திருவிழா ஏற்பாட்டாளர்கள், பாகன்கள் மற்றும் யானை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.