கேரளாவில் அதிர்ச்சி: கணவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு!

 
கேரளா

 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே, கணவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட 22 வயது எமில்டா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ഭർതൃ ഗൃഹത്തിൽ 22കാരി മരിച്ച നിലയിൽ; ഭർത്താവ് കസ്റ്റഡിയിൽ | Young Woman Found Dead at Husband's Residence in Chalakudy

எமில்டா, தனது கணவர் அஃப்சல் தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தி வந்ததாகத் தோழிகளிடம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ഭര്‍തൃവീട്ടില്‍ യുവതി മരിച്ച സംഭവത്തില്‍ ഭര്‍ത്താവ് അറസ്റ്റില്‍ | Sirajlive.com

 

இதையடுத்து, வரதட்சணை மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், எமில்டாவின் கணவர் அஃப்சலைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.