டியூஷன் சென்ற 12 வயது சிறுமி கார் மோதி பலி... நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
Oct 26, 2026, 20:45 IST
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், தம்பியுடன் டியூஷனுக்குச் சென்ற 12 வயது சிறுமி கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் - ஸ்வப்னா தம்பதியின் மகள் திவா (12). இவர் தனது 7 வயது தம்பியுடன் சனிக்கிழமை மாலை டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
எடவகை ரெண்டேனால் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் இருவர் மீதும் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட திவா படுகாயமடைந்தார். அவருடன் சென்ற தம்பி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மானந்தவாடி போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஓட்டுநர் சஜியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
