72 செமீ அகலத்தில் உலகின் மிகக் குறுகிய வீடு கெரெட் ஹவுஸ்... இடப்பற்றாக்குறையை வென்ற நவீன ஆச்சரியம்... வைரல் வீடியோ!

 
isrel

போலந்து நாட்டின் வார்சா நகரில் அமைந்துள்ள 'கெரெட் ஹவுஸ்' (Keret House), கட்டிடக் கலைஞர் ஜாகுப் ஷெஸ்னி என்பவரால் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் பயன்படுத்தப்படாமல் இருந்த மிகக் குறுகலான இடத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. சுமார் 150 சதுர அடி பரப்பளவு மட்டுமே கொண்ட இக்கட்டிடம், உலகின் மிகக் குறுகிய மற்றும் மெல்லிய வீடாக உலகளவில் அறியப்படுகிறது 

இடத்தின் அளவு மிகவும் சிறியதாக இருந்தாலும், கிடைக்கும் ஒவ்வொரு சென்டிமீட்டரும் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் சமையலறை, சாப்பிடும் மற்றும் அமரும் பகுதி, குளியலறை, வேலை செய்யும் இடம் மற்றும் தூங்கும் பகுதி என அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் திறம்படப் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வீட்டிற்குச் செல்லும் வழியும் மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சாலையில் இருந்து நேரடியாக நுழைய முடியாதவாறு, அருகிலுள்ள குறுகிய சந்துப் பாதை வழியாகச் சென்று படிக்கட்டுகள் மூலமாக மட்டுமே வீட்டுக்குள் நுழைய முடியும். மேலும், இதன் நுழைவாயிலும் வெளியில் இருந்து எளிதாகத் தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.