கிறங்க வைக்கும் Kewal Kiran பங்குகள்!! நிபுணர்கள் பரிந்துரை என்ன சொல்கிறது ?

 
பங்குச்சந்தை


பிராண்டட் ஆடை உற்பத்தியாளரான Kewal Kiran பங்குகள் மார்ச் 31, 2023ல் முடிவடைந்த நிதியாண்டில் 20 சதவிகிதம் இடைக்கால ஈவுத்தொகைக்கு வியாழன் அன்று எக்ஸ்-டிவிடென்ட் வர்த்தகத்தைத் தொடங்கியது. கேவல் கிரண் ஆடையின் இயக்குநர்கள் குழுக்கூட்டம் 2022-23 நிதியாண்டுக்கான இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக தலா ரூபாய் 10 என அறிவித்தது, அதே நேரத்தில் ஏப்ரல் கடைசி வாரத்தில் மார்ச் முடிவடைந்த காலாண்டிற்கான அதன் வருவாயை வெளியிட்டது.

பங்குச்சந்தை
நிறுவனத்தின் வாரியம் FY23 க்கு தலா ரூ.10 வீதம் மொத்தம் 6,16,25,185 பங்குகளின் இடைக்கால ஈவுத்தொகைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கார்ப்பரேட் வெகுமதிக்கு தகுதியான பங்குதாரர்களைத் தீர்மானிப்பதற்கான பதிவுத் தேதியை ஸ்மால்-கேப் நிறுவனத்தின் வாரியம் வியாழக்கிழமை, மே 11, 2023 என நிர்ணயித்துள்ளது. மே 20, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு, கெவல் கிரண் ஆடையின் தகுதியான பங்குதாரர்களுக்கு இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்குச்சந்தை
கடந்த ஒரு வருட காலத்தில் பங்குகள் 131சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது, இது இந்த காலகட்டத்தில் மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. Kewal Kiran Clothing மார்ச் 2023 முடிவடைந்த காலாண்டில் ஆரோக்கியமான அதாவது 27.28 சதவிகித நிகர லாபமாக ரூபாய் 31.49 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூபாய் 24.7 கோடியாக இருந்தது, மேலும் வரிசை அடிப்படையில் 17.06 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
காலாண்டில் அதன் மொத்த வருமானம் ஆண்டுக்கு 19.56 சதவிகிதம்  மற்றும் காலாண்டில் 0.67 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 206.98 கோடியாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் .55 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 464.55க்கு வர்த்தகமாகி வருகிறது நீண்ட கால அடிப்படையில் வாங்க பரிந்துரை செய்கிறார்கள் நிபுணர்கள்.

From around the web