பிரச்சாரத்திற்கு தயாராகும் குஷ்பு.. மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி.தொகுதியில் சுந்தர்.சி களம் காண்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக (AIADMK) சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு திரு. சுந்தர் சி அவர்களை வேட்பாளராக நிறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். pic.twitter.com/p7GkYscjeE
— A.C. Shanmugam (@DrACSofficial) March 28, 2026
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) சென்னையில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் அறிமுகப்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாஜக சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விபரங்களும் அன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'முறை மாமன்' தொடங்கி 'அரண்மனை' வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அரசியலில் ஏற்கனவே ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மதுரை மத்திய தொகுதி: இந்தத் தொகுதி தற்போது திமுக-வின் வசமுள்ள நிலையில், ஒரு பிரபலத்தை நிறுத்துவதன் மூலம் அங்குப் பலமான போட்டியை உருவாக்க அதிமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது.
