கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் குஷ்பு... சொத்து மதிப்பு எவ்வளவு?!

 
குஷ்பு சொத்து குஷ்பு சொத்து

மதுரை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி, தனது வேட்புமனுவுடன் சொத்து விபரங்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவரிடம் உள்ள ரொக்கப் பணம் மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர்.சியிடம் தற்போது கையிருப்பாக ரூபாய் 50,600 மட்டுமே உள்ளது. அவரது மனைவி குஷ்புவிடம் ரூபாய் 30,000 ரொக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சி பெயரில் ரூபாய் 2.97 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், குஷ்பு பெயரில் ரூபாய் 6.06 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளன. இயக்குநர் சுந்தர்.சி மற்றும் குஷ்பு தம்பதியினர் நிலம் மற்றும் கட்டடங்கள் என அதிகப்படியான முதலீடுகளைச் செய்துள்ளனர்.

சுந்தர்

சுந்தர்.சி பெயரில் 3 இடங்களில் மனை நிலங்கள் உள்ளன. இவரது அசையா சொத்துக்களின் மொத்த சந்தை மதிப்பு ரூபாய் 20.80 கோடி ஆகும். குஷ்பு பெயரில் 6 இடங்களில் மனை நிலங்கள் உள்ளன. இவரது அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூபாய் 16.79 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுந்தர்

சுந்தர்.சி மற்றும் குஷ்பு இருவரது சொத்துக்களையும் சேர்த்தால், அதன் மதிப்பு பல கோடிகளைத் தாண்டுகிறது. திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த போதிலும், கையில் வைத்துள்ள ரொக்கப் பணம் மிகவும் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது அரசியல் மற்றும் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.