காதலை உறுதிப்படுத்திய குஷி கபூர்... ஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர், இந்தி திரை உலகில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
குஷி கபூரும், நடிகர் வேதாங் ரெய்னாவும் 'ஆர்ச்சிஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் உருவாகி காதலித்து வருவதாகவும், பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த செய்திகளை இருவரும் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.
குஷி கபூர் அணிந்திருக்கும் நெக்லஸ் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் நெக்லசில் 'வி' என்ற எழுத்தும், 'கே' என்ற எழுத்தும் இரண்டுக்கும் நடுவில் 'லவ்' சிம்பிளும் உள்ளது.
இதை அடுத்து குஷி கபூர் தனது காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!