நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 4 பேர் கைது!

 
சிறுமி பாலியல் வன்கொடுமை பலாத்காரம் கர்ப்பம் கர்ப்பிணி

மகாராஷ்டிர மாநிலத்தில் நள்ளிரவில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தலசரி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது நண்பருடன் சாலையோரம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இளம்பெண்ணின் நண்பனைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அந்தப் பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

தனிமையான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளம்பெண்ணை, அந்த 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி இக்கடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய 2 பேரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.