பகீர் சிசிடிவி காட்சிகள்... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இளம்பெண் கடத்தல் !

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனே பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர்.
இதனைகண்ட ஆட்டோவில் வந்தவர்கள் கோயம்பேடு மாதா கோவில் தெரு அருகே இளம்பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இளம்பெண்ணை மீட்ட போலீசார் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் கடத்தப்பட்ட பெண் மேற்குவங்கத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!