கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் தீபாவளிக்கு திறக்கப்பட வாய்ப்பு!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 3 நடைமேடைகள் அமைக்கும் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தையும் (KCBT) புதிய புறநகர் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் ஆகாய நடைபாலப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய ரயில் நிலையத்தை முறையான பராமரிப்பில் வைப்பது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாக உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் கிளாம்பாக்கம் செல்பவர்களின் பயண நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
