ரயில் மூலம் சென்னைக்கு போதைப்பொருள் கடத்தலா? கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது!

 
போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

 

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் 50 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் பெண் ஒப்பனைக் கலைஞர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 போதை

கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்தின்பேரில் ஒரு ஆண் மற்றும் 2 பெண்களைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் போதை கஞ்சா

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் போதைப்பொருட்கள் சென்னைக்குக் கடத்தி வரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இளம் பெண்களைப் போதைக்கு அடிமையாக்கி, கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.