தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு?!
Aug 30, 2026, 07:08 IST
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகக் கேரள மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுப் பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஆறு மாத காலமாகத் தமிழகத்திற்கு என்று தனியாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரண் குமார் ரெட்டி புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த ஆளுநர் மாற்றத்தின் மூலம் தமிழக அரசியலில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
