நடிகர் கவினின் புதிய படம் “கிஸ்”... காதலர் தினத்தில் டீசர்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இவர் தமிழ் திரையுலகில் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான 'லிப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
KISS :) @Romeopictures_ @dancersatz @mynameisraahul @JenMartinmusic @preethiasrani_ @dop_harish @peterheinoffl master #MohanaMahendiran @editorrcpranav @iamgunashekar @sonymusicsouth @bypostoffice @teamaimpr @thetabsofficial#Kiss pic.twitter.com/8vtPyUAPpY
— Kavin (@Kavin_m_0431) February 10, 2025
இதையடுத்து வெளியான 'டாடா' திரைப்படமும் வெற்றி பெற்றது. ஆனால் 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான விமர்சனங்கள பெற்றது. இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. ஜென் மார்டின் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்கு "கிஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. "கிஸ்" படத்தின் டீசர் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14ம் தேதி வெளியாகலாம் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படமானது தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 3 மொழிகளில் வெளியாக இருப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
