Kissing My A**.. சவூதி இளவரசர் குறித்து டிரம்ப் பேச்சால் சர்ச்சை!

 
ட்ரம்ப் சவூதி ட்ரம்ப் சவூதி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் மாநாட்டில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்துப் பயன்படுத்திய ஒரு சில வார்த்தைகள் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி கடும் கண்டனங்களைக் குவித்து வருகின்றன. 

ஈரான் மற்றும் சவூதி அரேபியா இடையேயான மோதல் போக்கில் அமெரிக்கா சவூதிக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், சவூதி இளவரசர் குறித்துப் பேசிய டிரம்ப், "அமெரிக்கா இன்று உலகின் மிகவும் செல்வாக்குமிக்க நாடாக மாறியுள்ளதாகச் சவூதி இளவரசர் என்னிடம் தொலைபேசியில் கூறினார்."

ட்ரம்ப்

"தேர்தலில் நான் தோல்வியடைவேன் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், இப்போது அவர் என்னைத் திருப்திப்படுத்த (Kissing my a**) வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். இது நடக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்" எனத் தனது பாணியில் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

அதே உரையில், இளவரசர் முகமது பின் சல்மானைச் சிறந்த மனிதர் மற்றும் ஒரு சிறந்த போர்வீரன் என்றும் புகழ்ந்தார். சவூதிக்கு அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு ஆதரவைக் கோடிட்டுக் காட்டிய டிரம்ப், அமெரிக்காவின் உதவி இல்லாமல் சவூதியால் இரண்டு வாரம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்ற தனது பழைய கருத்தையும் மறைமுகமாக நினைவுபடுத்தினார்.

ட்ரம்ப்

வழக்கமாக உலகத் தலைவர்களைக் குறித்துப் பேசும்போது கடைப்பிடிக்கப்படும் கண்ணியத்தை டிரம்ப் மீறியுள்ளதாகப் பல நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஈரான் - சவூதி அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், டிரம்பின் இத்தகைய வெளிப்படையான மற்றும் தரம் தாழ்ந்த விமர்சனம் சவூதி அரேபியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.