BREAKING: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
கனமழை குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்!!

 அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள் , கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக  பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அவசரமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 அப்பல்லோவில் அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதனையடுத்து அவருக்கு இதயப்பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வேறொரு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டு  இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,  இருதயத் தொடர்பான பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது. 

கேகேஎஸ்எஸ்ஆர்

தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்சியின் பிற அமைச்சர்கள் , மாவட்ட செயலாளர் வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கேகேஎஸ் எஸ் ஆர் ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் வசித்துவ் வருகிறார். இவர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 6 முறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து  ஒரு முறையும், மொத்தம் 7  முறை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்

இவர்  எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில்  4 முறை மின்சாரத்துறை அமைச்சராக பணிபுரிந்தவர். அதிமுகவில் சில காலமும் திமுகவிலும் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். 2021  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதனையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web