தனியார் பேருந்து மோதி இளம்பெண் பலி; ஜிம்மில் இருந்து வீடு திரும்பிய போது சோகம்!

 
கேரளா

 

கேரள மாநிலம் கொச்சியில், தனியார் பேருந்து மோதியதில் இன்ஃபோபார்க் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman killed after speeding private bus runs over her in Kakkanad; driver booked | Kochi News - The Times of India

திருச்சூரைச் சேர்ந்த அக்ஷரா ஏ., காக்கநாட்டில் வசித்து வந்தார். இவர் புதன்கிழமை காலை உடற்பயிற்சி மையத்துக்குச் சென்றுவிட்டு, காக்கநாடு – இன்ஃபோபார்க் சாலையில் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குஜிக்காட்டுமூலா சந்திப்பு அருகே எதிரே வந்த ‘மலையில்’ என்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது.

பேருந்து அதிவேகமாக வந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அக்ஷரா படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலை 11 மணியளவில் உயிரிழந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் பினோயை இன்ஃபோபார்க் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105-வது பிரிவின் கீழ், கொலை நோக்கமில்லாத குற்றம்சார் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.