ஹேப்பி நியூஸ்... கொடைக்கானலில் இனி இந்த இடங்களுக்கெல்லாம் கட்டணமே கிடையாது!

 
guna guna

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கோடை விடுமுறையைக் கழிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்குள்ள முக்கியச் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்தச் சூழலில், சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்கவும், இச்சாலைகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும் மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொடைக்கானல்

அதன்படி,   வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு தற்காலிகமாக கட்டண விலக்கு அளிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பில்லர் ராக், குணா குகை, பைன் மரக் காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய சுற்றுலாத்தலங்களை இனி எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகக் கண்டு ரசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த அதிரடிச் சலுகையானது மே 25 முதல் மே 31 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் கொடைக்கானல்

பொதுவாக   வரும் மக்கள் இந்த இடங்களைக் காண நீண்ட வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதால் அதிக நேரம் விரயமாகி, அதுவே போக்குவரத்து நெரிசலுக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. தற்போது மாவட்ட ஆட்சியரின் இந்த தற்காலிக இலவச அறிவிப்பால், கட்டணக் கவுண்டர்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டு வாகனங்கள் தடையின்றிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை வாரத்தில்  செல்லத் திட்டமிடும் மக்களுக்கு இந்த செய்தி மிகவிருப்பமான ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.