கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. 8-வது குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்சாமி மரணம்!

 
கோடநாடு கொடநாடு

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8-வது நபரான கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ்சாமி (52) உடல்நலக்குறைவால் காலமானார்.

கோடநாடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புகுந்த மர்ம கும்பல் காவலாளி ஓம்பகதூரைச் சுட்டுக்கொன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது. இவ்வழக்கின் முதன்மை குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். 2-வது குற்றவாளியான சயான் விபத்தில் காயங்களுடன் தப்பினார்; ஆனால் அவரது மனைவியும் மகளும் பலியாயினர். மேலும், எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷும் தற்கொலை செய்துகொண்டார்.

கொடநாடு

வழக்கின் 8-வது குற்றவாளியான கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ்சாமி, கடந்த இரு வாரங்களாக உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் உறுதிபடுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முறைப்படி விசாரித்து ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலை மாற்றியமைக்க உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.