கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த புதிய தகவல் - அமைச்சர் நலம் விசாரிப்பு!

 
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தின் புதிய அறிக்கை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு

முன்னதாக கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தனியார் ஊடகத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது மகன்களிடம் அமைச்சர் ஆனந்த் நேரில் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்து நலம் விசாரித்து வருகிறார்.

தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு

கடைசியாக வெளியான அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் அடுத்த கட்ட அறிக்கை இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.