காரில் இருந்து இறங்கி தப்பிய 12 வயது சிறுமி... ஆட்டோ ஓட்டுநர்களால் மீட்பு!

 
கார்

 

சென்னை கூடுவாஞ்சேரி அருகே காருடன் கடத்திச் செல்லப்பட்ட 12 வயது சிறுமி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பத்திரமாக மீட்கப்பட்டார். காரில் இருந்து இறங்கி சிறுமி தப்பியதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்கள் அவருக்கு உதவியுள்ளனர்.

ஆம்புலன்ஸ்

கடந்த நவம்பர் 15-ம் தேதி, சிறுமியின் பெற்றோர் அவரை காரில் தூங்க வைத்துவிட்டு, அருகிலிருந்த ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், காரை சிறுமியுடன் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியைத் தேடியுள்ளனர். இதற்கிடையே, இன்று (நவம்பர் 16) காலை சீர்காழி அருகே காரை நிறுத்தியபோது, சிறுமி காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பியுள்ளார்.

அப்போது அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுமியை மீட்டு பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.காருடன் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை கடத்திச் சென்ற நபர் யார், கடத்தலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.