குடியரசுத் தலைவர் தேசிய நல்லாசிரியர் விருது ...கோயம்புத்தூர், ஈரோடு விரிவுரையாளர்கள் தேர்வு!

 
திரௌபதி முர்மு

உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் கற்பித்தல், சமூகப்பணி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, நாடு முழுவதிலும் உள்ள 21 பாலிடெக்னிக் மற்றும் உயர்கல்வி விரிவுரையாளர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதை இன்று (ஆக.24) அறிவித்துள்ளார்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த கோவை தனியார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் எஸ்.சசிகலா மற்றும் ஈரோடு தனியார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் கண்ணன் ரத்தினம் ஆகிய இருவரும் இந்தச் சிறப்புமிக்க விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் இந்தச் சாதனை கல்வி வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.