பைக்கில் சாலையை கடக்க முயன்ற முதியவர்! 😢 லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

 
விபத்து

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 61 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் மேலத்தெருவைச் சேர்ந்த அய்யாசாமி மகன் மாரிமுத்து (61). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆவல்நத்தம் சந்திப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

அப்போது நான்கு வழிச்சாலையை பைக்கில் குறுக்காகக் கடக்க மாரிமுத்து முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் கங்கைகொண்டானில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சோலார் பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக அந்த லாரி மாரிமுத்துவின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (32) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதியதில் 61 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் ஆவல்நத்தம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.