பதறிய KPY பாலா... கலங்க வைக்கும் வீடியோ!

 
kpy பாலா kpy பாலா

மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு, நடிகர் பாலா இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். வாகனத்தைப் பெற்றுக் கொண்டவர் கண்கலங்கியபடியே நடிகர் பாலாவுக்கு நன்றி தெரிவித்திருக்கும் வீடியோ கலங்கடிக்கிறது. 
தன்னுடைய சொந்த பணத்தில், இயலாதவர்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து வரும் நடிகர் பாலாவின் செயல்பாடுகள் மக்கள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமீபத்தில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சில கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தது, சில குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்கான நிதியை ஏற்பாடு செய்து கொடுத்தது, மிக்ஜாம் புயலின் போது களத்தில் இறங்கி பலருக்கும் உதவி செய்தது போன்ற விஷயங்களால் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பாலா. இதுமட்டுமல்லாது, மருத்துவ உதவிக்காக இலவச ஆட்டோ சேவையும் தொடங்கினார் பாலா.

 



இந்த வரிசையில் தற்போது, எம்சிஏ பட்டதாரி மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பைக் வாங்கிக் கொடுத்திருக்கிறார் பாலா. இவ்வளவு படித்தும் அவரிடம் பைக் இல்லாத காரணத்தால் அவரால் வேலைக்குப் போக முடியாத சூழல் இருந்ததாகவும் அதனால், தன்னால் முடிந்த உதவியை செய்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் பாலா.
அந்த மாற்றுத்திறனாளி நண்பரின் வீட்டுக்கே போய் பைக்கை வழங்கிவிட்டு வந்திருக்கிறார் பாலா. இதை சற்றும் எதிர்பாராத அந்த மாற்றுத்திறனாளி நெகிழ்ந்து போய் பாலாவுக்கு நன்றி சொல்லி இருக்கிறார். பாலாவின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.