கிருஷ்ணா நீர் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நீர்!

 
நாளை நள்ளிரவுக்குள் பூண்டி அணைக்கு மேலும் 1000 கனஅடி தண்ணீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக பூண்டி ஏரியைச் சென்றடைந்தது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, ஆந்திர அரசு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்துள்ளது.

பூண்டி ஏரி

கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு நேற்று வந்தடைந்தது. அங்கிருந்து கால்வாய் வழியாகப் பாய்ந்து வந்த நீர், இன்று காலை பூண்டி ஏரியைச் சென்றடைந்தது. தற்போது வினாடிக்குச் சுமார் 200 முதல் 300 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதால், அடுத்த சில வாரங்களுக்குத் தொடர்ந்து நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், பூண்டி ஏரிக்குக் கிருஷ்ணா நீர் வந்துள்ளது சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பூண்டி ஏரி நிறைந்தவுடன், அங்கிருந்து லிங்க் கால்வாய் வழியாகச் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கும் நீர் திறந்து விடத் திட்டமிடப்பட்டுள்ளது.

16 நாட்கள் கழித்து தமிழகம் வந்தடைந்த  கிருஷ்ணா நதிநீர்!  

இந்த நீர் வரத்து காரணமாக, வரும் கோடை மாதங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் கால்வாயின் கரைகளைப் பலப்படுத்தி, நீர் திருட்டைத் தடுக்கத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.