இன்ஸ்டா பழக்கம்… தொழிலதிபரை கடத்தி ரூ.3 லட்சம் பறிப்பு!

 
இன்ஸ்டா

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கல்லூரி மாணவியைப் பயன்படுத்தி ரூ.3 லட்சம் பறித்ததாக 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

நவீன் என்ற அந்தத் தொழிலதிபரை, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கல்லூரி மாணவி நேரில் சந்திக்க வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி கெலவரப்பள்ளி அணைப் பகுதிக்கு சென்ற நவீனை, அங்கு காத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் மிரட்டி ரூ.3 லட்சம் பறித்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நவீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஹரிகரன் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கல்லூரி மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதேபோன்ற முறையில் அந்தக் கும்பல் வேறு யாரிடமாவது பணம் பறித்துள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.