பைக்குகள் மோதி தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் பலி!

 
விபத்து

 கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் சுங்கச்சாவடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் வேலு (27) மற்றும் தருமபுரியைச் சேர்ந்த திருப்பதி (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்களில் ஏராளமான செல்போன்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்து தொடர்பாகச் சந்தேகம் எழுந்துள்ளது. செல்போன்கள் வாகனங்களில் இருந்ததற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் மற்றும் செல்போன்கள் தொடர்பான சந்தேகத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.